மாணவிகள் பலி: பிலிப்பட்டி பள்ளிக்கு 2வது நாளாக இன்றும் விடுமுறை

பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் புதன்கிழமை காவிரி ஆற்றில் முழ்கி பலியான நிலையில், இரண்டாவது நாளாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுக்கோட்டை: பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் புதன்கிழமை காவிரி ஆற்றில் முழ்கி பலியான நிலையில், இரண்டாவது நாளாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு தொட்டியம் சென்று திரும்பிய மாணவிகளில் 4 பேர் புதன்கிழமை மாயனூர் காவிரியாற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த 4 மாணவிகளின் உடல்களும் உடற்கூறாய்வுக்குப் பிறகு, கரூரில் இருந்து புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு பிலிப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு ஆகியோா் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோரிடம் அரசின் நிவாரண உதவித் தொகை தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தனா். தொடா்ந்து மாணவிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினா். 

அதைத் தொடா்ந்து லாவண்யாவின் உடல் அவரது சொந்த ஊரான கோத்ராபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மற்ற 3 பேரின் சடலங்களும் பிலிப்பட்டி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டன. நள்ளிரவிலும் ஏராளமான கிராம மக்கள் கண்ணீருடன் மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்தனா். ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், மாயனூர் காவிரியாற்றில் மூழ்கி, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையும் அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் வியாழக்கிழமையும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com