திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியாணாவில் 2 பேர் கைது!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியாணாவில் 2 பேர் கைது!

திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில், கொள்ளைகுழுவின் தலைவன் உள்பட ஆரிப், ஆசாத் ஆகிய 2 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். 
Published on


திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில், கொள்ளைகுழுவின் தலைவன் உள்பட ஆரிப், ஆசாத் ஆகிய 2 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். 

ஹரியாணாவில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று இரவு விமானம் மூலம் தமிழ்நாடு கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மா்ம கும்பல், பணம் வழங்கும் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.

இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினா் ஆந்திரம், கா்நாடகம், ஹரியாணா மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஹரியாணாவில் இருவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் கொள்ளைக் குழுவுக்கு தலைவன். கைது செய்யப்பட்ட ஆரிப், ஆசாத் ஆகிய இருவரையும் தனிப்படை காவல் துறையினர் விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com