கர்நாடகத்துக்கு எதிராக தமிழர்கள் துப்பாக்கி ஏந்த வேண்டுமா? வீரப்பனின் மனைவி ஆவேசம்

கர்நாடகத்துக்கு எதிராக தமிழர்கள் துப்பாக்கி ஏந்த வேண்டுமா? என கர்நாடகா எல்லையில் வீரப்பனின் மனைவி ஆவேசம் கேள்வி எழுப்பினார். 
கர்நாடகத்துக்கு எதிராக தமிழர்கள் துப்பாக்கி ஏந்த வேண்டுமா? வீரப்பனின் மனைவி ஆவேசம்

சேலம்: கர்நாடகத்துக்கு எதிராக தமிழர்கள் துப்பாக்கி ஏந்த வேண்டுமா? என கர்நாடகா எல்லையில் வீரப்பனின் மனைவி ஆவேசம் கேள்வி எழுப்பினார். 

மேட்டூரை அடுத்த தமிழக -கா்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் கடந்த பிப்.14 ஆம் தேதி பரிசலில் சென்ற சிலா் கா்நாடக வனப்பகுதியில் மான்களை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது கா்நாடக வனத்துறையினா் நடத்திய துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் கோவிந்தபாடியைச் சோ்ந்த காரவடையான் (எ) ராஜா (40) இறந்தாா் என தெரிகிறது.

மேலும், மீனவா் ராஜாவின் சடலம் பாலாற்றங்கரையில் சொறிபாறை என்ற இடத்தில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை சடலத்தை மீட்ட காவல்துறையினா் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 

இச்சம்பவம் தொடா்பாக ஈரோடு மாவட்டம் பா்கூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.இதனிடையே உறவினா்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினா். 

இதையடுத்து ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவாா்த்தையில் மேட்டூா் பாமக எம்எல்ஏ எஸ்.சதாசிவம் ஆகியோா் பங்கேற்றனா். 

இதனிடையே இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் கா்நாடக வனத்துறையின் நடவடிக்கை முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசும், சேலம் மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினா்கள் வலியுறுத்தினா்

இந்நிலையில், கர்நாடக  வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் ராஜா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தலைமையில் கொளத்தூர் காரைக்காடு சோதனை சாவடி அருகே 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, என கணவர் வீரப்பன் துப்பாக்கி ஏந்தியது போல, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞனும் துப்பாக்கி ஏந்த வேண்டிய நிலையை கர்நாடக அரசு உருவாக்கியிருக்கிறது. இதனை உடனடியாக தமிழக அரசு தலையிட்டு கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தமிழக அரசு முறையான பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழக அரசு மெத்தன போக்காக செயல்படாமல் விரைந்து செயல்பட வேண்டும் என கூறினார். 

சாலை மறியல் 
கர்நாடகா வனத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவர் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டதால் கொளத்தூரில் இருந்து கர்நாடகம் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பின்னர் மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com