இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் ஜெயக்குமார் புகார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.

News image
Updated On :20 பிப்ரவரி 2023, 8:41 am

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலர், முன்னாள் அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். வழக்குரைஞர் பாபுமுருகவேல் உடன் இருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பணத்தை தண்ணீர்போல் ஆளுங்கட்சியினர் செலவழிக்கின்றனர். 

Story image

வாக்காளர்களை இன்ப சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஆட்டக்களத்திலேயே இல்லை. நாக் அவுட் ஆகிவிட்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.