தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார்.
ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி இன்று நடைபெற்றது.
இதில், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் பலர் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர். பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். சென்னை சிவானந்தா சாலையில் இருந்து போர் வீரர்கள் நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற்றது.
பேரணியைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று இரவு 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார். அப்போது, ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

