பழனியில் பிப். 24-ல் ரோப் கார் சேவை இயங்காது!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை பிப்.24ல் (வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்காக கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை தொடங்கும் ரோப் கார் சேவை இரவுவரை செயல்படுகிறது.

இந்நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வின்ச் எனப்படும் மின் இழுவை ரயில் மற்றும் படிவழிப் பாதையை பயன்படுத்தி பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com