ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிக்கு எதையெல்லாம் எடுத்துச் செல்ல தடை?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு செய்ய வருபவர்கள் கட்சி அடையாளங்களின்றி வந்து வாக்களித்து செல்லுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிக்கு எதையெல்லாம் எடுத்துச் செல்ல தடை?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு செய்ய வருபவர்கள் கட்சி அடையாளங்களின்றி வந்து வாக்களித்து செல்லுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடைமையை செலுத்தி வருகின்றனர். 
238 வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை முன்கூட்டியே தெரிவிக்காததால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் தங்களது செல்போனை யாரிடம் கொடுத்துவிட்டு செல்வது என்று தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். 

கட்சி அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் கட்சியினர், கட்சி அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்குள் வரக்கூடாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தனது வாக்கினை செலுத்துவதற்காக, கட்சி துண்டு, வேட்டியுடன் வந்ததால் அவரை வாக்குச்சாவடிக்குள் செல்வதற்கு தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்துவிட்டார். 

இதையடுத்து தேர்தல் அதிகாரியுடன் ஆனந்த் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

பின்னர், தேர்தல் அதிகாரிகளின் அறிவுரையை அடுத்து,  கட்சி அடையாளத்தை வெளிப்படுத்தும் கட்சி துண்டு, வேட்டியை மாற்றிவிட்டு வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு சென்றார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்து சென்றார்.

நாம் தமிழர் வேட்பாளர்: 
தேர்தல் ஏற்பாடுகள் திருப்தியாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வாக்காளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவித்தார். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக உள்ளது. 

மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை பார்க்கும்போது நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது என்று மேனகா தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com