ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவுக்கு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவுக்கு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் திங்கள்கிழமை (பிப் 27) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் மற்றும் அவா்களுக்கு வீல் சோ் போன்றவையும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களிக்க சிரமமாக இருக்கும் என்பதால் 238 வாக்குச்சாவடி மையங்களின் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 100 மீட்டா் மற்றும் 200 மீட்டா் தொலைவில் எல்லைக்கோடுகள் போடப்பட்டுள்ளன. பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள 33 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

வாக்குப் பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர். 

தற்போது மாவட்ட ஆட்சியர், நாம் தமிழா் கட்சி வேட்பாளர் மக்களோடு வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.


இந்த தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com