நான் வெற்றிபெறுவேன்: அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேட்டி

ஈரோடு கிழக்கு தேர்தலில் நான் வெற்றிபெறுவேன் என 100 சதவீத நம்பிக்கை உள்ளது என அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்தார்.  
நான் வெற்றிபெறுவேன்: அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேட்டி
Published on
Updated on
1 min read


ஈரோடு: ஈரோடு கிழக்கு தேர்தலில் நான் வெற்றிபெறுவேன் என 100 சதவீத நம்பிக்கை உள்ளது என அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்தார்.  

ஈரோடு கருங்கல்பாளையம் கள்ளுபிள்ளையார்கோயில் வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

மக்கள் விறுவிறுப்பாக வாக்கு பதிவு செய்து வருகின்றனர். தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என 100 சதவீத நம்பிக்கை உள்ளது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நன்றாக செய்துள்ளது. 

வாக்காளர்களுக்கு மை வைப்பதில் ஒரு சில இடங்களில் தவறு நடக்கலாம். அது குறித்து கட்சி தலைமையில் இருந்து அறிக்கை வரும். ஈரோட்டில் எப்போதும் நாகரிகமான அரசியல் இருக்கும். திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும் சண்டை சச்சரவு வராது.  அநாகரிகமாக ஒருவரை ஒருவர் திட்டி பேசிக் கொள்ள மாட்டார்கள். அடிமட்ட தொண்டர்களுக்குள் சண்டை வருமே தவிர தலைவர்களுக்குள் சண்டை வராது. 

எனவே, தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. இன்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக எனக்கு தகவல் இல்லை. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அதிகமாக இருப்பதால் வாக்கு பதிவு தாமதமாகிறது. அதை விரைவுபடுத்துமாறு கூறியுள்ளோம் என்று தென்னரசு கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com