மதுரை மீனாட்சியம்மன் கோயில் அன்னதானம்.. தரச்சான்று கிடைத்தது!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அன்னதான கூடத்துக்கு இந்திய உணவு பாதுகாப்புத் துறை தரச்சான்று அளித்துள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் (கோப்புப் படம்)
மதுரை மீனாட்சியம்மன் கோயில் (கோப்புப் படம்)


மதுரை மீனாட்சியம்மன் கோயில் அன்னதான கூடத்துக்கு இந்திய உணவு பாதுகாப்புத் துறை தரச்சான்று அளித்துள்ளது.

மீனாட்சியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவுகள் தயாரிக்கப்படும் கூடத்துக்கு பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. 

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கி வைத்தாா்.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் பெறப்படுவது வழக்கம். 

அந்தவகையில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் அன்னதான கூடத்துக்கு இந்திய உணவு பாதுகாப்புத் துறை தரச்சான்று வழங்கியுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் 26 கோயில்களுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com