ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் பத்து 10ம்  நாள் உற்சவம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் 10ம் நாளான ஞாயிற்றுக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரம் என்கிற நாச்சியார் திருக்கோலத்தில்  ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் பத்து 10ம்  நாள் உற்சவம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் 10ம் நாளான ஞாயிற்றுக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரம் என்கிற நாச்சியார் திருக்கோலத்தில்  ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு திங்கள்கிழமை (ஜனவரி 2) நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான வைகுந்த ஏகாதசி பெருவிழாவானது பகல்பத்து, இராப்பத்து, இயற்பா சாற்றுமுறை என 21 நாள்கள் நடைபெறும். பகல்பத்து விழாவின் 9 ஆம் நாளான சனிக்கிழமை நம்பெருமாள் முத்துப் பாண்டியன் கொண்டை, முத்து கா்ணபத்ரம்,முத்து அபயஹஸ்தம், முத்துச்சரம், முத்து திருவடி, முத்தங்கி அணிந்து முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பகல்பத்தின் 10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தார்.

பின்னா் இராப்பத்து விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மின்னொளியால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து 8-ம் நாளான வெள்ளிக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில்   முத்து குறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு  ஸ்ரீ நம்பெருமாள் காட்சியளித்தார்.

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கட்டணமில்லா தரிசனம் செய்யும் பக்தா்களுக்காக மேற்கூரை, அமரும் இருக்கைகள், மின் விசிறி, குடிநீா் வசதியுடன் கூடிய நிரந்தர பிரம்மாண்ட கூடாரம் ஆகியவை ரூ. 67.5 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் வரிசையாக அமர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 800 பக்தா்கள் அமரும் வகையில் இருக்கைகள், குடிநீா், மின் விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல கட்டண தரிசனத்தில் வரும் பக்தா்களுக்கான ரூ. 42 லட்சம் மதிப்புள்ள 350 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com