தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உள்ளே உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி
பரமபதவாசலில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தியான பார்த்தசாரதி சுவாமி
பரமபதவாசலில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தியான பார்த்தசாரதி சுவாமி
Published on
Updated on
1 min read

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உள்ளே உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளினை முன்னிட்டு பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை (ஜனவரி 2) காலை 5.50 மணிக்கு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.

வைகுந்த​ ஏகாதசி: இந்துக்கள், மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11 ஆம் நாளினை வைகுந்த​ ஏகாதசியாக கொண்டாடுகின்றனர். திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் அன்று திறக்கப்படுவதாகவும் நம்புகின்றனர். 

இந்நாளில் முன்னிரவில் உறங்காது இருந்து அதிகாலையில் பெருமாள் கோயில்களில் அன்று மட்டும் திறக்கும் வடக்குத் திசையில் உள்ள பரமபத வாயில் என்றழைக்கப்படும் வாயில் வழியே சென்று இறைவனை வழிபடுவர். இந்நாளில் வழிபடுவோருக்கு பரந்தாமனின் பூரண அருள் கிடைக்கும் என்றும், நீங்காப் புகழுடன் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழலாம் என்பதும் ஐதீகம்.

பார்த்தசாரதி சுவாமி

108 வைணவத் திருத்தலங்களில் 23 ஆவது திருத்தலமாக தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீகுலசேகர ஆழ்வாரும், ஸ்ரீதிருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திங்கள்கிழமை கோவிந்தராஜப்பெருமாளுக்கு காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

ஆண்டாள் அருளித்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன. பின்னர் உற்வச மூர்த்தி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com