கோயம்புத்தூர்: இன்று அதிகாலை சைக்கிளில் சென்ற தூய்மைப் பணியாளர் தம்பதியினர் ராஜேந்திரன் மற்றும் தேவி மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியாகினர்.
ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரியும் தம்பதியினர் ராஜேந்திரன் மற்றும் தேவி, இவர்கள் தங்கள் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது பூலுவம்பட்டி அருகே அதிகாலை 5.30 மணியளவில் விபத்து நேர்ந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திரன் சைக்கிள் மீது எதிரே வந்த அரசுப்பேருந்து மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தம்பதிகள் ராஜேந்திரன் மற்றும் தேவி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் குபேரன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


