மழையில் பட்டாசு வெடித்த பாஜகவினர்! பட்டாசுக்கு குடைப் பிடிப்பதா?

பாஜகவைச் சேர்ந்தவர்கள் மழையில் பட்டாசு வெடிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 
மழையில் பட்டாசு வெடித்த பாஜகவினர்
மழையில் பட்டாசு வெடித்த பாஜகவினர்


பாஜகவைச் சேர்ந்தவர்கள் மழையில் பட்டாசு வெடிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

கொட்டும் மழையில் தண்ணீர் வழிந்தோடும் சாலையில் பட்டாசு வைத்ததுடன் மட்டுமில்லாமல், பட்டாசுக்கு குடை பிடிக்கும் விடியோவுக்கு பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதற்கு பட்டாசு வெடித்து கொண்டாடுவது அல்லது அனுசரிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக திருவிழாக்கள், திரையரங்குகள், திருமணம், அரசியல் நிகழ்வுகளில் அதிக அளவு பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. மழை, வெயில் என எந்த காலமாக இருந்தாலும் சில நிகழ்வுகளுக்கு பட்டாசு வெடிப்பது வழக்கமாகியுள்ளது.

அந்தவகையில் பாஜகவை சேர்ந்த சிலர், கொட்டும் மழையில் பட்டாசு வெடிக்கும் விடியோ இணையத்தில் பலரின் கேலிக்குள்ளாகியுள்ளது. அந்த விடியோவில், மழையில் தண்ணீர் வழிந்தோடும் சாலையில் மூவர் பட்டாசு வெடிக்கின்றனர். அதில் திரியில் தீ பற்றியதும் இருவர் விலகிவிட, ஒருவர் அருகிலிருந்து பட்டாசுக்கு குடை பிடிக்கிறார்.

பட்டாசுக்கு குடை பிடிப்பதா என்று பலர் இந்த விடியோவுக்கு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com