பொங்கல் தொகுப்புத் திட்டம்: தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின் 

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 
பொங்கல் தொகுப்புத் திட்டம்: தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின் 

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் 2.19 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு அளிக்கப்படவுள்ளது. இந்தத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை ஆகியவற்றுடன் முழு நீளக் கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரிசி, சா்க்கரை ஆகியன ஏற்கெனவே நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், முழுநீளக் கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

மாநிலத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, அவை லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. கரும்பு கொள்முதலுக்காக மட்டும் ரூ.71 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை தீவுத்திடலில் உள்ள அன்னை சத்யா நகர் நியாய விலைக்கடையில் பொங்கல் தொகுப்பை வழங்கி திட்டத்தை அவர் தொடக்கி வைத்தார். அப்போது இலவச வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1,000 வழங்கினார் முதல்வர். 

இதைத் தொடா்ந்து, பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகுப்பை அளிப்பதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமாா் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் டோக்கன்களில் அச்சிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தேதி, நேரத்தில் வந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமென தமிழக அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. வரும் 13-ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com