தேசிய திரைப்படப் பிரிவு உள்பட 4 அமைப்புகள் என்.எஃப்.டி.சி-யுடன் இணைப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

தேசிய திரைப்படப் பிரிவு உள்பட 4 அமைப்புகள் என்.எஃப்.டி.சி உடன் இணைத்துள்ள மத்திய அரசின் செயலுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய திரைப்படப் பிரிவு உள்பட 4 அமைப்புகள் என்.எஃப்.டி.சி-யுடன் இணைப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
Published on
Updated on
1 min read

தேசிய திரைப்படப் பிரிவு உள்பட 4 அமைப்புகள் என்.எஃப்.டி.சி உடன் இணைத்துள்ள மத்திய அரசின் செயலுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களை நிர்வகிக்கவும், ஆவணப்படுத்தவும் திரைப்படப் பிரிவு, திரைப்பட விழா இயக்குநரகம், தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகிய பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்த 4 அமைப்புகளையும் இணைக்க, மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஆலோசனை தெரிவித்தது. அதைனையேற்று கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்குத் திரையுலகினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி முதல் 4 அமைப்புகளும் தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் (என்.எஃப்.டி.சி) அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர் பதிவிட்டுள்ள கண்டன பதிவில், “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃபிலிம் டிவிஷன் ஆஃப் இந்தியா, என்எஃப்ஏஅய், டிஎஃப்எஃப் ஆகியவை இழுத்து மூடல். வரலாறு தங்களுக்கு சாதகமாக இல்லாதபோது அதை அழிப்பதே கோழைகளின் செயல்.

வரலாற்றுக் காட்சிகளின் மூலப்பொருள்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்புவோம்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com