
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வினியோகத்தை என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் எம்.டி.108 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வினியோகத்தை என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ரூ 1000 மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க | சபரிமலையில் 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை: குவியும் பக்தர்கள் கூட்டம்!
நிகழ்வின் போது உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டியன், நகர்மன்றத் துணைத் தலைவர் சுனோதா செல்வக்குமார், மாவட்ட திமுக துணை செயலாளர் குரு.இளங்கோ, நகர செயலர்கள் எம்.சி.வீரபாண்டியன், ஆர்.கே.செல்வக்குமார் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.