இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னை அருகே மார்ச் 5-ல் ஜல்லிக்கட்டு: அமைச்சர் தா.மோ. அன்பரசன்

சென்னை அருகே படப்பையில் மார்ச் 5-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜனவரி 2023, 2:47 pm

DIN

சென்னை அருகே படப்பையில் மார்ச் 5-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 

படப்பையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் ஒரு காளை உள்பட மொத்தம் 501 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்கும் விதமாக படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

முதல்பரிசு பெறும் காளைக்கு கார், மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம், மற்ற அனைத்து வெற்றி பெற்ற காளை மற்றும் வீரர்களுக்கும் பரிசு வழங்கப்படும். இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.