சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலைக் கண்டித்து நாளை(ஜன. 12) மாலை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரின் தொடக்க உரையில், தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி பெயர்களை உச்சரிக்க ஆளுநர் மறுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த செயலுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆளுநரின் இந்த செயல்பாட்டுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலைக் கண்டித்து நாளை(ஜன. 12) மாலை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'சட்டமன்ற ஜனநாயக மரபை மீறிய ஆளுநரின் செயல் கண்டனத்திற்குரியது! ஆளுநர் பதவியிலிருந்தும், தமிழகத்தை விட்டும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும்!' என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியறுத்தி விசிக சார்பில் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

