தூத்துக்குடி: தூத்துக்குடியில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில், பாளையங்கோட்டை சாலை மையவாடி அருகே உள்ள டீக்கடை முன்பு இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக தென்பாகம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலையில் தகவல் வந்ததாம். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீஸார், உடல் கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்தை நகர டிஎஸ்பி சத்யராஜ் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
உயிரிழந்தவரின் சட்டை பையில் இருந்த ஆதார் அட்டையில், சாந்தி நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் கார்த்திக் (35) என குறிப்பிட்டிருந்தது.
ஆதார் அட்டையில் குறிப்பிட்ட முகவரியில் சென்று போலீஸார் விசாரித்தபோது அப்படி யாரும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. எனவே, உயிரிழந்த இளைஞர் ஆதார் அட்டையில் உள்ளவர்தானா என்பது குறித்தும், கொலை செய்தவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: சகோதரர் கைது!
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


