தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆளுநருக்கு கொலை மிரட்டல்: திமுக பேச்சாளர் மீது காவல் ஆணையரிடம் புகார்

ஆளுநர் ரவிக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் தி.மு.க. பேச்சாளர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

News image
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
Updated On :14 ஜனவரி 2023, 9:38 am

DIN


சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் தி.மு.க. பேச்சாளர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்.என். ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் வழங்கப்பட்டுள்ளது.

Story image

அதில் ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் பற்றி சென்னை ஆணையர் அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘ஆளுநர் மாளிகை அளித்த புகார் குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.