வாழப்பாடியில் ஊர்கூடி சமத்துவப் பொங்கல் வைத்து அசத்தல் கொண்டாட்டம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இந்துக்கள்‌ மட்டுமின்றி, இசுலாமியர், கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு ஒன்றிணைந்து, ஞாயிற்றுக்கிழமை ஊர்கூடி சமத்துவ பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறி அன்பை பகிர்
வாழப்பாடியில் நடைபெற்ற பிரம்மாண்ட சமத்துவ பொங்கல் விழா.
வாழப்பாடியில் நடைபெற்ற பிரம்மாண்ட சமத்துவ பொங்கல் விழா.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இந்துக்கள்‌ மட்டுமின்றி, இசுலாமியர், கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு ஒன்றிணைந்து, ஞாயிற்றுக்கிழமை ஊர்கூடி சமத்துவ பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறி அன்பை பகிர்ந்து கொண்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவின் போது, வீடுகள் தோறும் புதுப்பானையில் பச்சரிசியில் பொங்கல் வைத்து, இயற்கையை வழிபடுவது வாடிக்கை.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சூரியன் பொங்கலை முன்னிட்டு பேரூராட்சி 11 ஆவது வார்டு உறுப்பினர் சத்யா சுரேஷ் தலைமையிலான பொங்கல் விழாக்குழுவினர், இப்பகுதியில் உள்ள அனைத்து மதத்தைச் சார்ந்த குடும்பங்களுக்கும், புதுப்பானை அடுப்பு, கரும்பு, மஞ்சள், பச்சரிசி வெல்லம், நறுமண பொருள்கள் ஆகியவற்றை பொங்கல் நன்கொடையாக வழங்கினர்.

தெரு முழுவதும் வரிசையாய் அணிவகுத்து அனைத்து மதத்தைச் சார்ந்த பெண்கள் குடும்பத்தினரோடு சமத்துவ பொங்கலிட்டு அசத்தினர்.

அனைத்து மதத்தினரும் சாதி, மத வேறுபாடின்றி, சமத்துவமாக பொங்கல் வைத்து, ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வு, பார்வையாளர்களையும், பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

இவ்விழாவில் வாழப்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சக்கரவர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் சத்யா சுரேஷ் மற்றும் தன்னார்வலர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதுகுறித்து பேரூராட்சி மன்ற உறுப்பினர் சத்யா சுரேஷ் கூறுகையில், 'எங்களது வார்டிலுள்ள அனைத்து குடும்பத்தினரும், பொங்கல் பண்டிகையை சமத்துவமாக கொண்டாடி மகிழ்ந்திடும் வகையில்,  பொதுமக்கள் ஒன்றிணைந்து ஊரணி பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

நாகரீகத்தினால் வீட்டிற்குள்ளேயே பொங்கல் வைத்து விழா கொண்டாடி வரும் இத்தருணத்தில், பாரம்பரிய விழாவை போற்றுகின்ற வகையில், ஊர்கூடி பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடியது மகிழ்ச்சியை தந்ததாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com