
சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூா் ஊராட்சியில் சேலம் புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள சிறுவாச்சூரில் பொங்கல்விழா சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையும் படிக்க | தூத்துக்குடி கடலில் தத்தளித்த மிளா வகை மான் மீட்பு!
இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக தற்காலிக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நூறு பெண்கள் பொங்கல் வைத்தனர். அனைவருக்கும் தென்னங்கன்று பரிசளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் எஸ்.செம்மலை, மாவட்ட அவைத்தலைவர் ஏ.டி.அர்ச்சுணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.நல்லதம்பி ஏ.பி.ஜெயசங்கரன் கு.சித்ரா ராஜாமணிமுத்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.மாதேஸ்வரன், அ.மருதமுத்து, ஆர்.எம்.சின்னதம்பி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் க.ராமசாமி, சின்னதம்பி, ஒன்றிய செயலாளர்கள் சி.ரஞ்சித்குமார், வி.பி.சேகர், சந்திரசேகரன் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.