ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

எம்ஜிஆர் பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:47 am

DIN

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 

மேலும், எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாளையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் 106 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Story image

அதேபோல, ஓ.பன்னீர்செல்வம், தனது இல்லத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் எம்ஜிஆரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.