மணப்பாறை அடுத்த ஆவரங்காடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 350 காளையர்களும் களம் கண்டு போட்டி நடைபெற்று வருகிறது. வருவாய் கோட்டாட்சியர் போட்டியினை தொடக்கி வைத்துள்ளார். இதுவரை 17-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவரங்காடு பொன்னர் - சங்கர் ஆலய திடலில், மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடியசைத்து போட்டியினை துவக்கி வைத்துள்ளார்.

முதலில் நான்கு கிராமங்களின் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 700-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டு வருகிறது.
காளைகளை அடக்க 25, 25 தொகுப்பாக 350 காளையர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த சில காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டுகூட பார்க்க முடியாதபடி சீறிப்பாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து அடக்கினர். காளைகளைப் பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் சேஷ்டி, தலைக்கவசமும் அளிக்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
_.jpeg)
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை வீரர்கள், பார்வையாளர், மாட்டு உரிமையாளர் என 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


