தை அமாவாசை: நாகப்பட்டினம் கடற்கரையில் குவிந்த மக்கள்!
தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.


தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து அவர்களின் சந்ததிகள் வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் தை அமாவாசை தினமான இன்று நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்கள் கடலில் நீராடிய பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஆலயம் சென்று வழிபாடு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...