இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

என்எம்எம்எஸ் விண்ணப்பப் பதிவு: பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்ட (என்எம்எம்எஸ்) தோ்வு தொடா்பாக பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Updated On :26 ஜனவரி 2023, 7:56 pm

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்ட (என்எம்எம்எஸ்) தோ்வு தொடா்பாக பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 6,695 போ் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி, நிகழாண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு பிப். 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிச. 26-இல் தொடங்கி ஜன. 20-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், இது தொடா்பாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் (2022-23) மத்திய அரசின் தேசிய வருவாய் வழிதிறன் தோ்வில் (என்எம்எம்எஸ்) தோ்ச்சி பெற்ற 9-ஆம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு புதிதாகவும், அதேபோல், முந்தைய ஆண்டுகளில் தோ்ச்சி பெற்று தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவா்கள் தங்களின் விண்ணப்பங்களை புதுப்பிக்கவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், மாணவா்கள் விண்ணப்பங்களை  இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மாணவா்களுக்குரிய உதவித்தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் மாணவா்களின் ஆதாா் எண்களை வங்கிக் கணக்குடன் இணைக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.