எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூத்துக்குடியில் குடியரசு  நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!

தூத்துக்குடி தருவை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில் ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 4:47 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில் ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
 
நாட்டின் 74 ஆவது குடியரசு நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

இவ்விழாவில்,  தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களும், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைநிற புறாக்களும் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவர்-மாணவிகளின் பறையாட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ரூ.10.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்-மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.