சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Updated On :

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது.

தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரத்திற்கு முன்பு எழுந்தருளினார்.

Story image

தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம் , உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் பக்தி பரவசத்துடன் கொடி யேற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.

பிப். 3ம் தேதி தெப்பத் திருவிழாவும், பிப். 4ம் தேதி திருக்கோயிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பாடும், தொடர்ந்து இரவு வடதிருக்காவேரி கரையில் அரங்கநாதரிடமிருந்து சீர்பெறும் நிகழ்வும், பிப்.5 ம் தேதி மஹா அபிஷேகத்துடன் வழி நடை உபயங்களை கண்டருளிகிறார்.

இந்நிகழ்வில் திருக்கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.