சளி, காய்ச்சலுக்கு வெறிநாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்

சளி மற்றும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த 13 வயது சிறுமிக்கு வெளிநாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சளி, காய்ச்சலுக்கு வெறிநாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்


கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில், சளி மற்றும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த 13 வயது சிறுமிக்கு வெளிநாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில், காவல்துறையினர் இன்னமும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை, எனினும், சிறுமியின் தந்தை புகார் மனு அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சிறுமியின் தந்தை கருணாகரன் அளித்துள்ள புகார் மனுவில், சளி, காய்ச்சல், இருமல் இருந்ததாள் தனது 13 வயது மகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு மருத்துவர் அவரை பரிசோதித்துவிட்டு, மருந்து மற்றும் ஊசி எழுதிக் கொடுத்ததாகவும், அதனை செவிலியரிடம் காட்டியபோது, அவர் இரண்டு ஊசிகளை மகளுக்கு செலுத்தியிருக்கிறார்.

சளி மற்றும் காய்ச்சல்தானே என்று நினைத்த நான், ஏன் இரண்டு ஊசிகள் போடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, வெளிநாய்க்கடி என்றால், இரண்டு ஊசி தான் போடுவார்கள் என்று பதிலளித்திருக்கிறார்.

இதனைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கருணாகரன், தனது மகளை நாய்க்கடிக்கவில்லை என்றும், சளி மற்றும் காய்ச்சலுக்காகவே மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறிய நிலையில், தனது தவறுக்கு செவிலியர் மன்னிப்புக் கேட்டுள்ளார். எனினும், இது மிகப்பெரிய தவறு என்பதால், சிறுமியின் தந்தை புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com