தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட உத்தரவை ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்திவைத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் எம்.எல். ரவி என்பவர், செந்தில் பாலாஜி நீக்கத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்த ஆளுநர் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கியது, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல ஊழல் வழக்குகள் அவா் மீது உள்ளதை சுட்டிக்காட்டி, அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்திருந்தார். பின்னர் 5 மணிநேரத்தில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி நீக்கப்படுவார் என்ற உத்தரவை நிறுத்திவைத்த ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்குரைஞர் எம்.எல். ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


