புதுக்கோட்டை: சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றிணைவதற்கான 'சூழல்' உருவாகியிருப்பதாக அவரது சகோதரர் திவாகரன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான பணிகளை சசிகலா செய்து வருவதால் அதிமுக ஒன்றிணைவதற்கான 'சூழல்' உருவாகியிருப்பதாக திவாகரன் தெரிவித்தார்.
திமுக ஆட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியைப் பொருத்தவரை, டைனமிக் முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். சிறிய சிறிய பிரச்னைகள் எழுந்தாலும் மொத்தத்தில் ஆட்சி நன்றாக நடைபெறுவதாக திவாகரன் கூறினார்.