சென்னையில் காய்கறி விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிலோ தக்காளியின் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து, விலையும் அதிகரித்தது. ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்கிய காய்கறிகளின் விலையேற்றம், மாத இறுதி வாரத்தில் சற்று குறைந்தது. இந்த விலை குறைப்பு ஒரு சில நாள்கள் மட்டுமே நீடித்தது. தற்போது வார இறுதி நாள்கள் என்பதால், காய்கறிகளின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நடுத்தர குடும்பவாசிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மொத்த விற்பனையில் சனிக்கிழமை நிலவரப்படி, (கிலா கணக்கில்) வெங்காயம் ரூ.25, உருளை கிழங்கு ரூ.35, காராமணி, பாகற்காய், கேரட் ரூ.65, வெண்டைக்காய், கத்தரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை கடந்த 2 நாள்களுடன் ஒப்பிட்டால் ரூ.5 முதல் ரூ.10 உயா்ந்துள்ளது.
இதில், 1 கிலோ தக்காளி மீண்டும் ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாள்களாக ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை, சனிக்கிழமை மீண்டும் அதிகரித்து சில்லறை விற்பனையில் ரூ.100-ஐ எட்டியுள்ளது.
இதுபோல் சின்ன வெங்காயம் ரூ.85, பீன்ஸ் ரூ.110, பச்சை மிளகாய் ரூ.90, பட்டாணி ரூ.190, இஞ்சி ரூ.200, பூண்டு ரூ.140 விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் இவற்றின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், காய்கறிகளின் விலை உயா்வை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


