சென்னை- திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை வருகிற ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் கடந்த 2018ல் தயாரிக்கப்பட்டு 2019ல் தில்லி - வாராணசி இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது. தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை - மைசூரு, சென்னை - கோயம்புத்தூர் இடையே என இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அடுத்ததாக சென்னை- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயிலை வருகிற ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் நான்காவதாக சென்னை- நெல்லை இடையே ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!
கால சர்ப்ப தோஷம் போக்கும் ஆதிகேசவ பெருமாள்! ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

துன்பங்கள் நீங்கி நன்மைகளைப் பெருக்கும் தொட்டியம் அனலாடீசுவரர் திருக்கோயில்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

