எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் மருந்தாளுநர் தற்கொலை
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் ராஜன். சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த ராஜன், நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் எழும்பூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் ராஜனுக்கு இரு மனைவிகள் இருப்பதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற
சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...