பட்டினப்பாக்கம் மீன் அங்காடி கட்டுமானத்தில் தொய்வு? மீண்டும் வந்த மீன்கடைகள்

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியிருந்த நிலையில், மீண்டும் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் நடைப்பாதையை ஆக்ரமிக்கத் தொடங்கிவிட்டன. 
மெரினா.. (கோப்பிலிருந்து)
மெரினா.. (கோப்பிலிருந்து)

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியிருந்த நிலையில், மீண்டும் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் நடைப்பாதையை ஆக்ரமிக்கத் தொடங்கிவிட்டன. 

சென்னை பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் மீன் சந்தை இன்னமும் நிறைவடையாத நிலையில், மீன் கடைகள், நடைப்பாதைகளை ஆக்ரமிக்கத் தொடங்கிவிட்டன.

சென்னை மெரினா அருகே, நடைப்பாதைகளில் பல கடைகள் குடைகளை விரித்தும், நாற்காலிகளை வைத்தும் வணிகத்தை நடத்தி வருகின்றனர். அது மட்டுமா? கடைகளின் குளிர்பதனப் பெட்டிகளும் நடைப்பாதைகளை ஆக்ரமித்து வைக்கப்பட்டுள்ளன.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து மீன்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது.

அந்தப் பகுதியில் ஆக்கிரமித்து மீன் கடைகளை மாநகராட்சி அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் இணைந்து மெரீனா காவல் நிலையம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான ஆக்கிரமிப்புகளை அகற்றியிருந்தனர்.

பட்டினப்பாக்கம் அருகே கட்டப்பட்டு வரும் மீன் விற்பனை அங்காடியை விரைவாக கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், அப்பணியிலும் தொய்வு நிலை நீடிப்பதால், இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரமிப்புகளை அகற்றுவதும், ஓரிரு நாள்களில் மீண்டும் கடைகள் குடையை விரிப்பதுமாக உள்ளது. எனவே, மீன் விற்பனை அங்காடியை விரைவாகக் கட்டி முடிக்க வேண்டும் என்பதே மீன் வியாபாரிகள் மற்றும் அப்பகுதியை நடைப்பாதை வழியாகக் கடந்து செல்வோரின் கோரிக்கையாக உள்ளது.

சுமார் ரூ.10 கோடி செலவில் இந்த மீன் அங்காடி கட்டப்பட்டு வருகிறது. இங்கு 336 கடைகள், குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் மீன்களை சுத்தம் செய்வதற்கு தனியான பகுதி அமைக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com