
தஞ்சாவூர்: ராகுல் காந்தி பதவி பறிப்பு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதிவு பறிப்பு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றண், சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதந்மூலம் ராகுகாந்தி பதவி பறிப்பையும், பழிவாங்கும் போக்கில் செயல்படும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் பாசிச, ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 30க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை ரயில் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.