விஜயகுமார் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன: விஜயகாந்த்

விஜயகுமார் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  
விஜயகாந்த்
விஜயகாந்த்

விஜயகுமார் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி, பின்னர் இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட விஜயக்குமாரின் பணி போற்றத்தக்கது. அவரின்  மறைவு காவல்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு. 
காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த டிஐஜி விஜயக்குமார் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, சுட்டு தற்கொலை செய்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை சம்பவத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிய சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com