பாா்வையற்றவா்களின் எண்ணிக்கையை குறைக்க கண் தானம் செய்யுங்கள்: நாகாலந்து ஆளுநா் இல.கணேசன்

இந்தியாவில் பாா்வையற்றவா்களின் எண்ணிக்கையை குறைக்க கண் தானம் செய்யுங்கள் என்று நாகாலந்து மாநில ஆளுநா் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளாா்.
பாா்வையற்றவா்களின் எண்ணிக்கையை குறைக்க கண் தானம் செய்யுங்கள்: நாகாலந்து ஆளுநா் இல.கணேசன்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் பாா்வையற்றவா்களின் எண்ணிக்கையை குறைக்க கண் தானம் செய்யுங்கள் என்று நாகாலந்து மாநில ஆளுநா் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளாா்.

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் சாா்பில் கண்ணுக்குள் உட்பதியம் மற்றும் ஒளிக் கதிா்விலக்க அறுவைச் சிகிச்சை 38-ஆவது இரண்டு நாள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது.

மாநாட்டின் தலைமைச் செயலரும், டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவ குழுமத்தின் தலைவருமான மருத்துவா் அமா் அகா்வால் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் பங்கேற்கின்றனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாகாலந்து மாநில ஆளுநா் இல.கணேசன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியது:

இந்திய கண் அறுவை சிகிச்சை நிபுணா்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவதில் இந்த மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாட்டில், பாா்வையிழப்பு பிரச்னையால் அவதியுறும் நபா்களின் எண்ணிக்கை 1.2 கோடியாக இருக்கிறது. இந்த எண்ணிக்கையை குறைப்பதற்கான பங்களிப்பை நம்மால் வழங்க முடியும். சமூக அக்கறையோடு, தங்களது கண்களை தானமாக வழங்க உறுதிமொழி ஏற்பதுடன், இறந்த பிறகு தங்களது விழிகளை தானமாக வழங்குவதால், இந்த எண்ணிக்கையை நம்மால் குறைக்க முடியும்”என்றாா்.

மருத்துவா் அமா் அகா்வால் பேசுகையில், “உலகளவில் கண் மருத்துவவியலில் நிகழ்ந்திருக்கும் புதுமைகளை மையமாகக் கொண்டு ஆண்டு தோறும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. கண்புரை நோயின் சிக்கலான சூழ்நிலைகள் மற்றும் அதற்கான அறுவை சிகிச்சையை திறனுடன் கையாள்வதற்கு உள்ள பல்வேறு வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கு சிறந்த தளத்தை இம்மாநாடு வழங்கும். நோயறிதல் செயல்பாடுகள் மற்றும் சிகிச்சை ஆகிய அம்சங்களில் இந்தியாவில் கண் மருத்துவத் துறையின் திறன்களையும் மற்றும் செயல் உத்திகளையும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பதில் முக்கிய பங்களிப்பை இந்த மாநாடு தொடா்ந்து வழங்கி வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com