டாஸ்மாக்: காலி பாட்டில்கள் விற்றதில் ரூ. 1.35 கோடி!

டாஸ்மாக்‌ மதுக்கடையில் காலி பாட்டில்கள் விற்றதில் ரூ.1.35 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டாஸ்மாக்‌ மதுக்கடையில் காலி பாட்டில்கள் விற்றதில் ரூ.1.35 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.

டாஸ்மாக்‌ மதுக்கடையில்‌ விற்பனை செய்யப்படும்‌ மதுபாட்டில்களை திரும்பப்‌ பெறும் திட்டம்‌ மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு விற்பனைக் கழகம் (டாஸ்மாக்) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் காலி மதுபாட்டில்களை கீழே கொட்டுவது, உடைப்பது போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், காலி பாட்டில் வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் (ஏஏஜி) ஜே.ரவீந்திரன் மூலம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட காலி மதுபாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தின்படி, கோவை தெற்கு மாவட்டத்தில் 95% காலி மதுபாட்டில்கள் திரும்பப்  பெறப்பட்டன. கோவை வடக்கில் 94%, பெரம்பலூரில் அதிகபட்சமாக 99% காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டன. இந்த இரு மாவட்டங்களில் ஜூன் மாதம் வரை விற்பனை செய்யப்பட்ட 5.83 கோடி காலி பாட்டில்களில் 5.52 கோடி காலி பாட்டில்கள் வாடிக்கையாளர்களால் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, சேலம், வேலூர், நாமக்கல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மலைப்பகுதி மாவட்டங்களில் 96.2% காலி பாட்டில்கள்  திரும்ப பெறப்பட்டது. டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ரூ.1.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருவாயை மதுபாட்டில்கள் வைக்கப்படும் கிடங்கிற்கு வாடகைக்கு எடுப்பதற்கு செலவிடப்படும் என்று நீதிபதிகள் என்.சதீஷ் குமார் மற்றும் டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,829 சில்லறை விற்பனை நிலையங்களில், 4,397 கடைகளில் (நீலிகிரி, கோயம்புத்தூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர) காலி பாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 4,397 கடைகளில், 427 கடைகளில் மட்டுமே காலி பாட்டில்களை சேமிப்பதற்கான இடம் உள்ளது, மீதமுள்ள 3,926 கடைகளுக்கு சேமிப்பதற்கான வசதி தேவைப்படுகிறது. உள்கட்டமைப்பு குறைபாடுகளை கருத்தில் கொண்டு, காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தவுள்ளது.

எனவே, 12 மாதங்களில் 10 மாவட்டங்களிலும் மற்றும் 18 மாதங்களில் மேலும் 10 மாவட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 14 மாவட்டங்களில் இன்னும் 24 மாதங்களில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட பின்னர், சேகரிக்கப்பட்ட காலி பாட்டில்களை அப்புறப்படுத்த டெண்டர் விடுவது, சில்லறை விற்பனை நிலையங்களில் பணிபுரியும் 24,000 பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, கடைகளுக்கு அருகாமையில் சேமிப்பு வசதி வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த 15 மாத கால அவகாசத்தை நீதிமன்றம் அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com