
செங்கல்பட்டு அருகே கைதியை தனிப்படை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
செங்கல்பட்டில் மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வருபவர் நாகராஜ். இவரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தனிப்படை அமைத்து கொலை குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளில் சிலர் செங்கல்பட்டு அருகே பரனூர் வழியாக சென்றதாக அறிந்த தனிப்படை போலீசார், அப்பகுதியில் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அருகே புளிப்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள ரயில்வே பாதையில் சந்தேக நபர் ஒருவர் செல்வதாக அறிந்து அவரை பிடிக்க முற்பட்டபோது அந்த நபர் காவல் துறையினரை திருப்பி தாக்க முயன்றார். உடனடியாக போலீசார் அவரது இடது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணையில் அவர் செங்கல்பட்டு சின்ன நத்தம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது. இடது காலில் காயம் ஏற்பட்ட அஜய் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார் .
காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் டீசர் தலைமையில் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கைதியை செங்கல்பட்டு மாவட்ட தனிப்படை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள மற்ற கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் தேடும்படியில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.