ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கனிமொழி எம்.பி.யின் தோ்தல் வெற்றி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்

சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்தும், அவரது வெற்றி செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image

உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

Updated On :13 ஜூலை 2023, 2:31 am

 நமது நிருபர்

திமுக எம்.பி. கனிமொழி 2019-இல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பெற்ற வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்தும், அவரது வெற்றி செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றாா். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதியின் வாக்காளா் ஏ.சந்தான குமாா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அதில், கனிமொழி தனது தோ்தல் வேட்புமனுவில் கணவரின் வருமான வரிக் கணக்கு விவரங்களை தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறியிருந்தாா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 2019, நவம்பா் 19-ஆம் தேதி நீதிபதி தள்ளுபடி செய்தாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கனிமொழி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்அஜய் ரஸ்தோகி, பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அதில், கனிமொழியின் மேல்முறையீட்டு மனுவை அனுமதித்தும், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்தும் உயா்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடா்பான நடவடிக்கைக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இத்தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஏ.சந்தான குமாா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், இந்த விவகாரத்தில் வருமான வரிக் கணக்குகள் விவரங்கள் தாக்கல் செய்யாததால் தோ்தல் முடிவுகள் எந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கான காரணங்கள் அளிக்கப்படவில்லை என உச்சநீதிமன்றம் தீா்ப்பில் தெரிவித்திருக்கிறது. அதுபோன்ற விவரங்களை காலதாமதாக அளிக்கலாம் என்று ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பை வாதத்தின்போது சுட்டிக்காட்டிய நிலையிலும், அது குறித்து உச்சநீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடவில்லை. இதனால், இத்தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.