108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில், தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் விறகு அடுப்பில் சமைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இதில் தினசரி சுமார் 3,000 பேருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மதிய அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்குச் சோறு, சாம்பார், ரசம், மோர், இரண்டு வகை கூட்டு மற்றும் ஊறுகாய் என அறுசுவையான உணவு பரிமாறப்படுகிறது.
தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, கேஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதனால் அன்னதானப் பணியை நிறுத்தாமல் தொடர்வதற்காக, கோயில் நிர்வாகம் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
கரோனா காலத்தில் கூட இத்தகைய சவால்களைச் சந்திக்கவில்லை. தற்போது அன்னதானம் தடைபட்டுவிடுமோ என்ற அச்சமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது என ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விறகு வாங்குவதிலும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்னரே ஆர்டர் கொடுத்தால் மட்டுமே, ஒரு வார காலதாமதத்திற்குப் பிறகு விறகு வந்து சேர்கிறது. தற்போது இருப்பு உள்ள விறகு மற்றும் கிடைக்கும் சொற்ப அளவு கேஸ் சிலிண்டர்களைக் கொண்டு நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.
இந்த இக்கட்டான போர்ச்சூழல் போன்ற தட்டுப்பாடு விரைவில் நீங்கி, இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி, ஸ்ரீரங்கம் கோயில் அன்னதானத் திட்டத்திற்குத் தேவையான எரிவாயுவை முன்னுரிமை அடிப்படையில் தங்குதடையின்றி ஒதுக்கித் தர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Summary
At the Sri Ranganathaswamy Temple in Srirangam, Trichy, the Annadanam (free food offering) provided to devotees is now being cooked over wood-fired stoves due to the prevailing shortage of cooking gas.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு !
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்!

திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




