பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஒரே முகவரியில் நோபல் ப்ரிக்ஸ், உதயநிதி அறக்கட்டளை: அண்ணாமலை கேள்வி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்தாண்டு மார்ச் மாதம் துபை பயணம் மேற்கொண்ட போது, நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ. 1,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

News image
அண்ணாமலை (கோப்புப் படம்)
Updated On :13 ஜூலை 2023, 9:55 am

DIN

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் இயங்குவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்தாண்டு மார்ச் மாதம் துபை பயணம் மேற்கொண்ட போது, நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ. 1,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், நோபல் ஸ்டீல்ஸ் குழுமத்தில் உள்ள நோபல் ப்ரீக்ஸ் நிறுவனமும், தமிழக முதல்வரின் மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பெயரில் இயங்கக்கூடிய அறக்கட்டளையும் “53/22, சரவணா வீதி, நடராஜா பேலஸ், தி நகர், சென்னை-600017” என்ற ஒரே முகவரியில் செயல்படுவது குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.  

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

“1,000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர்போன துபை நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், நோபல் ப்ரீக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக தமிழக கல்வித் துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஸ் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.