தீபாவளி: தென் மாவட்ட ரயில்களில் 15 நிமிடங்களில் முடிந்த முன்பதிவு!

தீபாவளி பண்டிகைக்கான நவம்பர் 11 ஆம் தேதி தென் மாவட்ட ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு டிக்கெட் 15 நிமிடங்களில் முடிந்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தீபாவளி பண்டிகைக்கான நவம்பர் 11 ஆம் தேதி தென் மாவட்ட ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு டிக்கெட் 15 நிமிடங்களில் முடிந்தது. 

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ரயில்களில் பயணிக்க முன்பதிவு தொடங்கியுள்ளது. 

அதன்படி தீபாவளிக்கு முந்தைய நாள், நவ. 11 ஆம் தேதி பயணிக்க ரயில் முன்பதிவு டிக்கெட் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 

முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் டிக்கெட் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. 

நெல்லை, கன்னியாகுமரி, செங்கோட்டை, மதுரைக்குச் செல்லும் ரயில்களில் டிக்கெட் முழுவதும் தீர்ந்து 'காத்திருப்புப் பட்டியல்'(waiting list) நிலையே இருக்கிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி உள்ளிட்ட ஒரு சில ரயில்களில் டிக்கெட் ஆர்ஏசி(RAC) -யில் உள்ளது.  

நேற்று(வியாழக்கிழமை) நவ. 10 ஆம் தேதி செல்வதற்கான டிக்கெட் தென் மாவட்ட ரயில்களில் ஒரு சில நிமிடங்களிலேயே முன்பதிவு முழுவதும் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com