அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மன் கோயில் தேர் விழா: வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மன் கோயில் தேர் விழா: வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலைவாசல் அருகே வீரகனூரில் 27 ஆண்டுகளுக்குப் பின் அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மன் கோயில் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


சேலம்: தலைவாசல் அருகே வீரகனூரில் 27 ஆண்டுகளுக்குப் பின் அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மன் கோயில் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மன் திருக்கோயில் 27 ஆண்டுகளுக்கு பின் திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 7 ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருத்தேர் விழா தொடங்கி, வெள்ளிக்காப்பு, சிம்மவாகனம், சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் முத்துப்பல்லக்கில் பவனி வருதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று அருள்மிகு ஸ்ரீ பொன்னாளியம்மனை திருத்தேரில் ஏற்றப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து , பின்னர் பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில், வீரகனூர் மட்டுமின்றி சொக்கனூர், ராமநாதபுரம், தெடவூர், ராயர் பாளையம், லத்துவாடி, திட்டச்சேரி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com