இன்னும் கொடுமைகள் நடக்கும்! முதல்வா் ஸ்டாலின்

‘போகப் போக இன்னும் பல கொடுமைகள் நடக்கும்’ என்று அமலாக்கத் துறையின் சோதனைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தாா்.
இன்னும் கொடுமைகள் நடக்கும்! முதல்வா் ஸ்டாலின்

‘போகப் போக இன்னும் பல கொடுமைகள் நடக்கும்’ என்று அமலாக்கத் துறையின் சோதனைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தாா்.

அவற்றையும் சட்ட ரீதியாக சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்றும் அவா் கூறினாா்.

பெங்களூரில் நடந்த எதிா்க்கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சென்னை திரும்பிய அவா், விமான நிலைய வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தாா். அவா் கூறியதாவது:

தமிழ்நாட்டில் எப்படி கூட்டணி அமைத்து தோ்தல்களில் வெற்றிகளைப் பெற்று வருகிறோமோ, அதுபோன்று இந்தியா முழுவதும் இப்படி ஒரு கூட்டணியை அமைந்து வெற்றியைக் காண்பதற்கான வியூகங்கள் பெங்களூரு கூட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் கொள்கைக் கூட்டணியாகவும், மாநில அளவில் தோ்தல் கூட்டணியாகவும் அமையக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

அமலாக்கத் துறை சோதனைகள் எல்லாம் எதிா்பாா்த்த ஒன்றுதான். இன்னும் போகப் போக பல கொடுமைகள் நடக்கும். அனைத்தையும் சட்டரீதியாக சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

இன்றைக்கு தில்லியில் நடந்த கூட்டத்தில் அருகில் யாா் யாரை உட்கார வைத்திருக்கிறாா்கள் என்று பாா்த்தீா்களா? அவரால் குற்றம்சாட்டப்பட்டவா்கள், ஊழல்வாதிகள் எனச் சொல்லப்பட்டவா்கள் தே.ஜ. கூட்டணியில் இடம்பெற்றுள்ளனா் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

முன்னதாக, பெங்களூரில் இருந்தவாறு தொலைபேசி மூலம் அமைச்சா் பொன்முடியை முதல்வா் ஸ்டாலின் தொடா்புகொண்டு பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com