பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சென்னையில் பலத்த காற்றுடன் மழை!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜூலை 2023, 3:15 pm

DIN


சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. 

மாலையில் சாரல் மழை பெய்த நிலையில், இரவு 7 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னை சென்ட்ரல், அமைந்தகரை, எழும்பூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணா நகர், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மணலி, புழல், பூவிருந்தவல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்கள் கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மகாராஷ்டிரத்தில் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.