வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வெகு விமர்சையாக நடைபெற்ற வனபத்ரகாளியம்மன் கோயில் கொடியேற்றம் விழா!

வனபத்ரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

News image
Updated On :23 ஜூலை 2023, 9:07 am

DIN

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் 30-ம் ஆண்டு ஆடி குண்டத்தை முன்னிட்டு கொடியேற்றம் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Story image


 தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சிம்மக் கொடியை தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.பின்னர் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தமிழ் வினாயர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து கொடியுடன் கோயிலை சுற்றி வந்தனர். சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்குப் பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. 

கடந்த 18-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.இதை அடுத்து லட்சார்னை நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனின் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

Story image

அதைத்தொடர்ந்து இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகின்ற 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை  நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்குகின்றனர்.

இவ்விழா நிகழ்ச்சிகளை திருக்கோயில் துணை ஆணையர் கைலாசமூர்த்தி தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.