தமிழகம் முழுவதும் மகளிா் உரிமைத் தொகை பதிவு முகாம் தொடங்கியது!

தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. 
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முகாமை மாவட்ட ஆட்சியர் சி.பழனி திங்கள்கிழமை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முகாமை மாவட்ட ஆட்சியர் சி.பழனி திங்கள்கிழமை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.


சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவை செய்யும் பணியை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வீடு தேடி வந்து அளிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை பயனாளிகள் நிவா்த்தி செய்து, முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல், நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு செய்யும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சி.பழனி திங்கள்கிழமை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ரமேஷ் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை முதல்கட்ட முகாமும், ஆகஸ்ட் 5 முதல் 16-ஆம் தேதி வரை இரண்டாம்கட்ட முகாமும் நடைபெறவுள்ளது. 

கோவை: 
கோவை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு செய்யும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை மாவட்டத்தில் 1,401 நியாயவிலைக் கடைகளில் மொத்தம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 875 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். முதல்கட்டமாக 839 நியாயவிலைக் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் திங்கள்கிழமை (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 2,979 தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 5 கடைகளுக்கு ஒரு பகுதி அலுவலா், 15 கடைகளுக்கு ஒரு வட்டார அலுவலா் மற்றும் ஒவ்வொரு வட்டத்துக்கும் அந்தந்த வட்டாட்சியா்கள் முகாமில் நடைபெறும் பணிகளை கண்காணிக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com